உரக்குழியில் பானை நிறுவுதல்

பள்ளத்தின் அளவு
பானையின் அளவிற்கு ஏற்ப மண்ணில் குழி தோண்டவேண்டும்.
நான் ஒரு சிறிய பானையை பயன்படுத்துகிறேன் , பானையின் உயரம் சுமார் 1 அடி இருக்கும். இதற்கு இரண்டடி நீளமும் ஒன்றரை  அடி அகலமும இரண்டரை அடி  பள்ளம் அளவுகொண்ட குழியை நிறுவுகிறேன்.
பள்ளத்தின் அடி பகுதியில் வீட்டில் பெற பட்ட மக்கிய  காய்கறி கழிவுகள், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட மலர்கள் , காய்ந்த இலைகள்  மற்றும் இலை சருகுகளை இடவேண்டும் , தோண்ட பட்ட குழியின் மண்ணில் 2 பங்கிருக்கு 1 பங்கு தொழு உரம் கலக்க வேண்டும். பின், பானையை பள்ளத்தில் வைத்து அதனை சுற்றி இந்த மண் தொழுஉர கலவையை    இடவேண்டும். பானையின் வாய் பகுதி பூமியின் மேற்பகுதியின்  இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
2016-01-13 17.59.20
இவ்வகையான நிறுவப்பட்ட பானையில் அமிர்தகரைசல் , பஞ்ச கவ்விய , தே மோர் கரைசல் , மீன் அமிலம் போன்ற நொதிக்கும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளை இட்டு, நொதிக்க வைத்து பயன் பெறலாம்.
Advertisements

வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது?!!

உங்களுக்கு கிடைத்த DIY கிட்டில் , வெறும் தேங்காய் நார் கழிவுடன் , வெறும் மண்ணுடன் அல்லது   இரண்டையும் கலந்து ஆற்று மணலுடன் சேர்த்து வளர்க்க , எது சிறந்தது என்று அறிய பின்வரும் காணொளியை பாருங்கள்.

அனுபவத்தின் அடிப்படையில் யாம் அறிந்தது 1:1:1:1 விகிதத்தில்  மண்,தேங்காய் நார் கழிவு, உரம் (தொழுவுரம்),ஆற்று மணல் இவைகளை நன்கு கலந்து  growbag இல் இட்டு வளர்த்தால் நல்ல மகசூல் எடுக்கலாம்.

பஞ்ச காவியம்.

பஞ்ச காவியம் என்பது பசுவினால் பெறப்படும் ஐந்து முக்கிய பொருட்களினால் செய்யப்படும் ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கி.

பஞ்சகாவியத்தில் உள்ள பசுவினால் பெறப்பட்ட ஐந்து பொருட்களும், நம் செய்முறைக்கு தேவையான  அதன் அளவுகளும்

1) பசும் பால்  – 500 ml
2) பசுஞ் சாணி  – ஒரு மாட்டு சாணம் ( சுமார் 1 கிலோ)
3) பசும் நெய்  – 400 கிராம்
4) பசும்  தயிர்  – 500 ml
5) பசும் கோமியம்  – சுமார் 500 ml

பஞ்சகாவியத்தில் இடவேண்டிய மற்ற பொருட்கள்

6) கரும்புச்சாறு  – 500 ml
7) இளநீர்  – ஒன்று
8) வெல்லம் – 1 கிலோ
9) வாழைப்பழம். – 12 நம்பர் .

செய் முறை :

ஒரு பானையில் பசுஞ்சாணியை  நெய்யுடன் சேர்த்து நன்கு கலக்க ( ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க) வேண்டும் .

கவனம் : பசுஞ்சாணி மாடு இட்ட உடன் எடுத்து உடனடியாக கலக்க வேண்டும் .


கலக்க பட்ட இக்கலவையின் பானையின் வாயை ஒரு துணியினால் கட்டி ஐந்து நாட்கள் மூடி வைக்க வேண்டும்.  தினமும் இத்திரவத்தை காலையும் மாலையும் நன்கு கலக்க வேண்டும்..
எப்படி கலக்க வேண்டும் தெரியுமா …ஆமாம் முன்னாலே சொன்னார் போல் – ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .

ஐந்தாம் நாள் இக்கலவை பார்க்க இப்படி இருக்கும்.

2015-07-18 14.12.15

ஐந்தாம் நாள் மற்ற இடுபொருட்களை இத்திரவத்துடன் சேர்க்க வேண்டும் .மற்ற ஒரு சுத்தமான பானையில் இத்திரவத்தை இட்ட பின், பின் வரும் பொருட்களை திரவத்துடன் சேர்க்க வேண்டும்.

கோமியத்தை சேர்த்தல்.

2015-07-18 14.13.212015-07-18 14.12.22

பாலை சேர்த்தல்.

2015-07-18 14.17.05 2015-07-18 14.17.13

தயிரை  சேர்த்தல்.2015-07-18 14.18.00 2015-07-18 14.18.13

கரும்பு சாற்றை  சேர்த்தல் .

2015-07-18 14.19.49 2015-07-18 14.19.53

இளநீரை சேர்த்தல்.

2015-07-18 14.21.00 2015-07-18 14.21.06

வெல்லத்தை  சேர்த்தல்.

2015-07-18 14.15.46 2015-07-18 14.16.08

வாழைப்பழத்தை சேர்த்தல்.

2015-07-18 14.21.482015-07-18 14.21.58

தண்ணீரை சேர்த்தல்.

2015-07-18 14.14.27
இப்பொழுது இடப்பட்ட இடுபொருட்களை நன்றாக கலக்க வேண்டும். ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .கலக்க பட்ட இக்கலவையின் பானையின் வாயை ஒரு துணியினால்  மூடி வைக்க வேண்டும். இருப்பத்தி ஒரு(21) நாள் இக்கலவையை நொதிக்க விட வேண்டும். மறவாமல்  தினமும் இத்திரவத்தை காலையும் மாலையும் நன்கு கலக்க வேண்டும்.. கலக்கியபின் பானையின் வாயை அதே  துணியினால்  மூடி வைக்க வேண்டும்.

2015-07-18 14.22.462015-07-18 14.22.57

குறிப்பு :

 இந்த செய்முறையில் கலத்தல்/கலக்குதல் என்றால், ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .தினமும் கலக்கும் கொம்பை வெறும் (க்ளோரின் கலக்காத ) தண்ணீரில் கழுவவேண்டும்.

பஞ்சகாவியம் தயார்.

வடிகட்டிய பஞ்சகாவியத்தை பாட்டிலில் நிரப்பி, திப்பியை செடிகளின் வேற்பகுதிக்கு போடவும்.

2015-08-05 12.39.19

 

அவரையும் வெண்டையும் பயிர் செய்ய…

2014-11-24 17.22.37

நமக்கு அவரையும் வெண்டையும் பயிர் செய்ய வேண்டும். இவற்றை பயிர் செய்ய பத்து பாலிதீன்  பைகள்  தேவை. இதில் நான்கு பைகளை வெண்டைகும், ஆறு  பைகளை அவரைக்கும் ஒதுக்கி கொள்ளலாம்.வெண்டைக்கும் அவரைக்கும் நேரடி விதைப்பு முறை, இவைகளின் விதைகளை  அப்படியே பாலிதீன் பைகளில் நட வேண்டும். இவ்விரு பயிர்களுக்கும் நடும்  பொழுது  ஒரு அங்குல குழி பலத்தில் விதைகளை இட வேண்டும்.

 நேரடி விதைப்பு முறை

2015-10-22 11.19.31

ஒரு பைக்கு நான்கு வெண்டை விதைகளை நட வேண்டும், வெண்டைக்காய் நான்கு மாத பயிர். நடவு செய்த முதல் ஆறு வாரங்களில் காய் காய்க்க ஆரம்பிச்சிவிடும்.இப்பயிரில்  பையுக்கு சுமார் அஞ்சு கிலோ சாகுபடி பண்ணலாம்.நாலு பைக்கு சுமார் இருவது கிலோ காய்கள் சாகுபடி பண்ணலாம்.

 

அவரையில, நாம இடறுது செடி அவரை ரகம்,அவரை நான்கு மாத பயிர் ,நடுவு செய்த பிறகு ஆறிலிருந்து எட்டு வாரத்தில் காய்க ஆரம்பிச்சிடும்.பையுக்கு இரண்டு கிலோ காய்க்கும். ஆறு பையுக்கு சுமார் பனிரெண்டு கிலோ மகசூல் எடுக்கலாம்.

 

விதைத்தபின் பன்னிரண்டு நாள் ஆன  பயிர்

 

 2015-10-29 13.19.03 2015-10-29 13.19.10

 

வெண்டைகும் அவரைக்கும் நடவுற்க்கு பின்  பதினஞ்சு  நாளுக்கு ஒருமுறை அமிர்த கரைச்சலும்,  மாதத்திற்கு ஒரு முறை பஞ்ச காவியமும் ஊட்டம் அளித்தல் வேண்டும்.  வடிகட்டிய தெளிந்த அமிர்தகரைசல்/பஞ்சகாவியம் வற்றை தெளிப்பான் மூலம் பூ,இலை மற்றும் தண்டு பகுதியில் தெளிக்க நல்ல பயனை தரும். வடிகட்டிய பின் இருக்கும் திப்பியை வேர்களுக்கு போட வேண்டும்.

 

எப்போ தோட்டம் போட ஆரம்பிக்கலாம்?!.

சரி, எப்போ தோட்டம் போட ஆரம்பிக்கலாம். தேய் பிறை  திரயோதசி திதியில்  மண் கலத்தல் தொட்டியை பராமரித்தல் போன்ற ஆரம்ப கட்ட வேலையை செய்ய உகந்த நாள்.
திரயோதசி திதி என்பது மன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல் என்பதாக நம் முன்னோர் கருதினர். எக்காரியத்தை செய்தாலும் அவற்றை அன்போடு செய்தல் அவசியம். அன்பே சிவம் ஆவதால்  மண்ணுடன் அன்பு செலுத்துதல், நட்பு வளர்த்தல் அவசியமும் நன்மையும் ஆகும்.
உண்ணும் உணவே மருந்து, மருந்தே உணவு என்னும் பழமொழி இங்கு உண்டு. ஐப்பசி மாதம் தேய்பிறை   திரயோதசி திதி ஆயுளை நீடிக்கும் தன்வந்தரி விரதம், தன்வந்தரி என்னும் கடவுள் நம்மை நோயிலிருந்து நொடி பொழுதும் காப்பவர். இவரை ஆயுர்வேதத்தின் மானசிக குருவாக கருதிகிறார்கள், வரும் தீபாவளிக்கு முன் வரும் தேய் பிறை  திரயோதசி திதியில் தொட்டி மற்றும் தோட்ட பராமரிப்பு பணிகளை செய்வது சுபப்பலனை தரும்.வளர்பிறையில் விதைப்பை வைத்து கொள்ளலாம்.

மூடாக் என்பது …

நாம்  வெயில போகும்போது வெப்பம் தலைய தாக்காத இருக்க துணிய போடறோம் , அது போல செடியின் வேர்களை காப்பாற்ற அதன் மேல் உயிர் தாவர  கழிவை போடறது தான் மூடாக் ஏன்னு  சொல்லுறாங்க.இதை ஆங்கிலத்தில் mulch  ஏன்னு சொல்லுறாங்க .

 

மூடாக் போடாத பயிர்
20150303_101208

கரும்பு சக்கையை மூடாகாக போடப்பட்ட பயிர்.
20150303_101218

மூடாகினால் விளையும் நன்மைகள்

1) வேர்களில் இருந்து  நீரை ஆவி ஆவதை குறைப்பது.

2) மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களை  நேரடி சூரிய வெப்பத்தில் இருந்து காப்பது.

மாடி தோட்டத்தில் , தொட்டி/பாலிதீன்  பைகளில் செடி வைத்தோம் எனில்

அதிக படியான நீர் விட்டோம்னா ,

1)  தொட்டி/பையில் இட்ட நீரில் கரையும் இயற்க்கை இடுபொருட்கள் , தொட்டியில் இருந்து வெளியேறி விடும்.

2) மாடி  தளத்திற்கு பாதிப்பு .

நீர் மேலாண்மைக்கு மூடாக் ஒரு நல்ல வழி முறை. மேல சொல்லப்பட்ட பாதிப்பை மூடாக் தவிர்க்கிறது.

 

 

என்ன என்ன காய்கறிகளை பயிரிடலாம்

நாம் என்ன என்ன காய்கறிகளை பயிரிடலாம். ஆங்கிலத்தில் “agriculture is area specific” என ஒரு வழக்கு உண்டு. அதாவது விவசாயம் எந்த இடத்தில பயிரிடிகிறோம் என்பதை பொருத்தது . மேலும் எந்த காலத்தில பயிரிடிகிறோம் என்பதும் முக்கியம். மண்வளமும் கருத்தில் கொள்ளவேண்டும்.நான் சென்னையில வாழுறேன், இங்கே அக்டோபர் முதல் மார்ச் முதல் வாரம் வரை பயிர் செய்ய ஏற்ற பருவம். மத்த காலத்தில் பயிர் செய்யல்லாம் ஆனா பசுமை குடில் அமைதல் வேண்டும் .சென்னை போன்ற வெப்பமான இடத்தை மனதில் வைத்துகொண்டு நான் மேலும் வர்ணனையை தொடர்கிறேன். ஒரு நான்கு முதல் ஆறு பேர் கொண்ட குடும்பதிற்க்கான காய்கறிகளை பயிரிடிகிறோம் என்று கருத்தில் கொள்கிறேன்.
முதல் முயற்சியாயின் கீரை பயிரிட்டு நம் பயிர்வளர்க்கும் திறனையும் ஆர்வத்தையும் வளர்த்துகொல்ள்ளலாம். கீரை வளர்ப்பது சுலபம். 30 நாள் முதல் 50 நாள் பயிர்.
மாதத்தில் பத்து  முறை நாம் கீரை மசியல் செய்கிறோம் என்றால் பத்து  பாலித்தீன்   பைகள் (grow bags )  வேண்டும் . இவற்றின் அளவு  11″ x  11″  x  11″ இருத்தல் வேண்டும். இதற்க்கு சமமான அளவு  தொட்டிகள் இருப்பின் அவற்றில் பயிர் செய்யலாம்.
கீரை விதைக்கும் போது பாலிதீன் பையின் உள்ள மண்ணின் மேற்பரப்பை கிண்டி கிளறி விட்டு, கீரை விதைகளை  ஆற்று மணலுடன் கலந்து பாலிதீன் பையில் பரவலாக இடல் வேண்டும்.
விதைகள் இடும் காலம் முதல் 7 நாள் மழை இல்லாது இருத்தல் நன்று. இந்த முதல் 7 நாளில் பயிர்கள் அழகாக மண்ணில் இருந்து  மேல் எழும்பி வரும்  ,  இந்த ஏழு நாட்களும்   காலையும் மாலையும்  நீர் ஊற்றும்போது  மிக கவனம் தேவை, தேவையான அளவு தண்ணீரை விதைகள்/பயிரின் மேல் தெளித்திட வேண்டும், மண் நனைந்திட வேண்டும்  . நீரை மக்கிலோ பூவாளியிலோ ஊத்த கூடாது.
இதே காலத்தில்  நாற்று தட்டில் 9 தக்காளி 9 கத்தரிக்காய் விதைகளை  இட்டு நீர் ஊற்ற வேண்டும்.
இதில் 5 தக்காளி 5 கத்தரிக்காய் கன்றுகளை 1 1/2 மாதம் கழித்து கீரை வளர்க்கும் பைகளில் கீரையின் அறுவடைக்கு பின்னர் அப்பைகளில் நடவேண்டும்.