பஞ்ச காவியம்.

பஞ்ச காவியம் என்பது பசுவினால் பெறப்படும் ஐந்து முக்கிய பொருட்களினால் செய்யப்படும் ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கி.

பஞ்சகாவியத்தில் உள்ள பசுவினால் பெறப்பட்ட ஐந்து பொருட்களும், நம் செய்முறைக்கு தேவையான  அதன் அளவுகளும்

1) பசும் பால்  – 500 ml
2) பசுஞ் சாணி  – ஒரு மாட்டு சாணம் ( சுமார் 1 கிலோ)
3) பசும் நெய்  – 400 கிராம்
4) பசும்  தயிர்  – 500 ml
5) பசும் கோமியம்  – சுமார் 500 ml

பஞ்சகாவியத்தில் இடவேண்டிய மற்ற பொருட்கள்

6) கரும்புச்சாறு  – 500 ml
7) இளநீர்  – ஒன்று
8) வெல்லம் – 1 கிலோ
9) வாழைப்பழம். – 12 நம்பர் .

செய் முறை :

ஒரு பானையில் பசுஞ்சாணியை  நெய்யுடன் சேர்த்து நன்கு கலக்க ( ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க) வேண்டும் .

கவனம் : பசுஞ்சாணி மாடு இட்ட உடன் எடுத்து உடனடியாக கலக்க வேண்டும் .


கலக்க பட்ட இக்கலவையின் பானையின் வாயை ஒரு துணியினால் கட்டி ஐந்து நாட்கள் மூடி வைக்க வேண்டும்.  தினமும் இத்திரவத்தை காலையும் மாலையும் நன்கு கலக்க வேண்டும்..
எப்படி கலக்க வேண்டும் தெரியுமா …ஆமாம் முன்னாலே சொன்னார் போல் – ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .

ஐந்தாம் நாள் இக்கலவை பார்க்க இப்படி இருக்கும்.

2015-07-18 14.12.15

ஐந்தாம் நாள் மற்ற இடுபொருட்களை இத்திரவத்துடன் சேர்க்க வேண்டும் .மற்ற ஒரு சுத்தமான பானையில் இத்திரவத்தை இட்ட பின், பின் வரும் பொருட்களை திரவத்துடன் சேர்க்க வேண்டும்.

கோமியத்தை சேர்த்தல்.

2015-07-18 14.13.212015-07-18 14.12.22

பாலை சேர்த்தல்.

2015-07-18 14.17.05 2015-07-18 14.17.13

தயிரை  சேர்த்தல்.2015-07-18 14.18.00 2015-07-18 14.18.13

கரும்பு சாற்றை  சேர்த்தல் .

2015-07-18 14.19.49 2015-07-18 14.19.53

இளநீரை சேர்த்தல்.

2015-07-18 14.21.00 2015-07-18 14.21.06

வெல்லத்தை  சேர்த்தல்.

2015-07-18 14.15.46 2015-07-18 14.16.08

வாழைப்பழத்தை சேர்த்தல்.

2015-07-18 14.21.482015-07-18 14.21.58

தண்ணீரை சேர்த்தல்.

2015-07-18 14.14.27
இப்பொழுது இடப்பட்ட இடுபொருட்களை நன்றாக கலக்க வேண்டும். ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .கலக்க பட்ட இக்கலவையின் பானையின் வாயை ஒரு துணியினால்  மூடி வைக்க வேண்டும். இருப்பத்தி ஒரு(21) நாள் இக்கலவையை நொதிக்க விட வேண்டும். மறவாமல்  தினமும் இத்திரவத்தை காலையும் மாலையும் நன்கு கலக்க வேண்டும்.. கலக்கியபின் பானையின் வாயை அதே  துணியினால்  மூடி வைக்க வேண்டும்.

2015-07-18 14.22.462015-07-18 14.22.57

குறிப்பு :

 இந்த செய்முறையில் கலத்தல்/கலக்குதல் என்றால், ஒரு கொம்பை கொண்டு  50 முறை  கடிகைச் சுற்று /வலஞ்சுழி/clockwise  மற்றும் 50 முறை இடஞ்சுழி /எதிர் கடிகைச் சுற்று/anti  clockwise  ஆக  திரவத்தை கலக்க வேண்டும் .தினமும் கலக்கும் கொம்பை வெறும் (க்ளோரின் கலக்காத ) தண்ணீரில் கழுவவேண்டும்.

பஞ்சகாவியம் தயார்.

வடிகட்டிய பஞ்சகாவியத்தை பாட்டிலில் நிரப்பி, திப்பியை செடிகளின் வேற்பகுதிக்கு போடவும்.

2015-08-05 12.39.19

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s